குடியரசு தின விழா: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து

நாட்டின் 69வது குடியரசு தினம் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு டுவிட்டர் வழியே தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  அவர் வெளியிட்டுள்ள செய்தியில், குடியரசு தின வாழ்த்துகள்.  ஜெய்ஹிந்த் என தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தினை முன்னிட்டு நாட்டின் கலாசாரம் மற்றும் பன்முக தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் ராணுவ அணிவகுப்பு ராஜபாதையில் நடைபெறும்.  இந்நிகழ்ச்சியில் 10 ஆசிய நாட்டை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்கின்றனர்.

குடியரசு தின அணிவகுப்பில் ராணுவ உயரதிகாரிகள் ஆசியன் கொடியை கையில் ஏந்தி செல்கின்றனர்.  ராஜபாதையில் பல்வேறு மாநிலங்கள், அமைச்சகங்கள் உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் 23 வகையான அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்லும்.

குடியரசு தினத்தினை முன்னிட்டு தலைநகரில் தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply