மருதானையில் 2.36 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
மருதானை, பிரதீபா மாவத்தையில் ஒரு தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு மத்திய சட்ட அமுலாக்கல் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபரிடம் இருந்து 2.36 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply