கண்டி வன்முறைச் சம்பவம் குறித்து ஜனாதிபதி விசாரணைக் குழு
கண்டி நிருவாக மாவட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரணை செய்ய ஜனாதிபதி விசாரணைக் குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.ஓய்வுபெற்ற மூன்று நீதிபதிகளைக் கொண்டு இக்குழு அமைக்கப்படவுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த இனக் கலவரத்துக்கு அடிப்படைக் காரணம், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருந்ததா? என்றும், உயிர் உடைமைகளை இழந்தவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும், இந்த வன்முறையின் பின்னால் இருந்த சூழ்ச்சி எது என்பதைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமைகள் எற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும் என பரிந்துரைப்பதும் இவ்விசாரணைக்குழுவின் பொறுப்புக்களாக சுமத்தப்படவுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் கூறியுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply