தியத்தலாவை இராணுவ முகாமில் குண்டு வெடிப்பு : மூவர் காயம்

தியத்தலாவையிலுள்ள இராணுவப் பயிற்சி முகாமில், இன்று (17) காலை இடம்பெற்ற பயிற்சியின்போது கைக்குண்டு ஒன்று மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பயிற்சியொன்றின் போதே, இந்தக் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் இதனால், இராணுவ வீராங்கனையொருவரும் இராணுவ வீரர்கள் இருவருமாக மூவரே காயமடைந்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில், இராணுவப் பொலிஸார் மற்றும் தியத்தலாவை பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply