இரத்மலானையில் துப்பாக்கிச் சூடு : இராணுவ வீரர் காயம்
இரத்மலான, சக்கிந்தாராம வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை 7.20 மணியளவில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த இராணுவ கோப்ரல் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply