ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு ஆதரவாக 5 மனுக்கள் தாக்கல்!

நாடாளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு முரணானதென மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயற்பாடு சரியானதென 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும் அமைச்சர்களுமான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்டோர், உயர்நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு முரணானதென தெரிவிக்கப்பட்டு ஐ.தே.க., த.தே.கூட்டமைப்பு, ஜே.வி.பி. போன்ற கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் நேற்று 13 மனுக்களை தாக்கல் செய்தன. அவை தொடர்பான இரண்டாம் கட்ட விசாரணை இன்று காலை 10 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதியின் செயற்பாட்டை ஆதரித்து இன்று ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்ற வியாக்கியானத்தை எதிர்பார்த்து இரு தரப்பினரும், அவர்களது ஆதரவாளர்களும் உயர்நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ளனர்.

இதனால் பெருமளவான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் குறிப்பிட்டார்கள். அத்தோடு, நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை எதிர்பார்த்து வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் அங்கு திரண்டுள்ளதாக செய்தியளார்கள்  மேலும்  குறிப்பிட்டார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply