உயர்நீதிமன்ற பகுதிக்கு விசேட பாதுகாப்பு
தற்பொழுது உயர்நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்வைக்கப்பட்டிருக்கும் 10 இற்கும் மேற்பட்ட மனுக்களின் விசாரணைகளின் இரண்டாவது கட்டம் தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது.
இதன்காரணமாகவே உயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களால் 10இற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேவேளை குறித்த மனுக்களை விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதிகளான நளின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டதுடன் மனுக்கள் தொடர்பிலான சட்டத்தரணிகள் வாதங்களும் பெறப்பட்டதுடன் சட்ட மா அதிபரின் கருத்து இன்று பெறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply