மைத்திரியின் தீர்மானத்துக்கு பச்சைக்கொடி: சட்டமாஅதிபர் திணைக்களம்

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்படமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் முன்வைக்கப்பட மனுக்கள் மீதான விசாரணைகள் தற்பொழுது மிகவும் சூடுபிடித்துள்ளது. இதில் ஏற்கனவே கூறியிருந்தபடி சட்ட மா அதிபர் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் சரியானது என்று வாதங்களை முன்வைத்துள்ளது.

மேற்படி திணைக்களத்தின் சார்பாக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சொலிசிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா, பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களான நெரின் புள்ளே, இந்திக்க தேமுனி டி சில்வா, சிரேஷ்ட அரச சட்டவாதி அவந்தி பெரேரா ஆகியோர் நீதிமன்றத்தில் தமது நிலைப்படுகளை முன்வைக்கவுள்ல நிலையில் சட்ட மா அதிபர் சற்று முன்னர் ஜனாதிபதியின் தீர்மானத்தை நியாயப்படுத்துள்ளார்.

அதன்படி ”அரசியலமைப்பின் 33(2) c விதந்துரை தெளிவாக – குழப்பமற்று உள்ளது…” எனவும் அதன்படியே ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைத்தார் எனவும் கூறியிருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply