பிரபாகரன் பயன்படுத்திய முக்கிய பதுங்குகுழி உடைப்புப் பணி ஆரம்பம்

கிளிநொச்சி, புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய பதுங்குகுழி நேற்று இராணுவத்தினரால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தின் 14 ஆம் படைப் பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பதுங்குகுழி நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்டு காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

சுற்றுலாப் பயணிகள் இப்பதுங்குகுழியை கடந்த வருடம் வரை பார்வையிட்டு வந்தனர். அது இவ் வருடம் முதல் தடை செய்யப்பட்டிருந்தது. குறித்த பதுங்குகுழியை உடைக்கும் பணியே நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply