கட்சிக்குள் இரகசிய வாக்கெடுப்பிற்கு என்ற செய்தி வெறும் வதந்தி : மனோ கணேசன்

பிரதமர் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி சில பங்காளிக் கட்சிகளுடன் இரகசிய வாக்கெடுப்பிற்குக் கோரிக்கை விடுத்துள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவலொன்று பரப்பப்படுவதாக ஐக்கிய தேசிய முன்னணி பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்காக ஒருவரைத் தெரிவு செய்யும் முகமாக ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து இரகசிய வாக்கெடுப்போன்றை நடத்தவுள்ளதாக இன்றைய பத்திரிக்கை ஒன்றில் வெளியான தகவல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply