எதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது :TNA

எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித் துள்ளார்.ஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும் இந்த அரசாங்கம், கூட்டணி அரசாங்கம் என்பதை மறுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்ததை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவுயும் அந்தஸ்தும் வேண்டும் என முரண்பட்டு வருவதுடன் இன்று (18) பாராளுமன்றத்தில் இது குறித்து முறையிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply