அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தாருங்கள் : பிரதமர் ரணில்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை வழங்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.யாரிடமும் கையேந்தாமல் தனித்து நின்று நாட்டை முன்னேற்றத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஐ.தே.முன்னணிக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.
காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் நீதிக்கான போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பில் அனைத்து கட்சிகளிடமும் கருத்துக்களை பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் எதிர்வு கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply