நாடு முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற வெடிப்புச் சம்பவத்தின் போது, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் உயிரிழந்த பல நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தேசிய துக்கம் தினம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் உள்ள மரியன்னை தேவாலயத்தில் இன்று காலை 8.15 மணி அளவில் வழிபாடுகளுடன், மெழுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தியதுடன், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் தேசிய துக்க தினம் இன்று (23) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதோடு, அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்ராஸ் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் காலை 8.30 மணி முதல் 8.33 மணி வரையிலான 3 நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதேவேளை, தேசிய துக்க தினம் இன்று யாழ். பெரிய கோவிலில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. இவ் அஞ்சலி நிகழ்வின் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தீபங்களை ஏற்றி அமைதி பிராத்தனை செய்ததுடன் ஆலயத்திற்குள் விசேட பிராத்தனையும் நடைபெற்றது.

பொது மக்களின் ஏற்பாட்டில் வாழைச்சேனை பிரதான சந்தையில் குண்டுவெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தோருக்கு ஈகைச் சுடரேற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

பல பிரதேசங்களில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவங்களில் உயிர் நீத்த உறவுகளுக்கு மலையகம் முழுவதும் மக்கள் தொழிலுக்கு செல்லாது கண்ணிர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி தமது அஞ்சலியை செலுத்தினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply