யாழில் உணர்வுபூர்வமாக மக்கள் அஞ்சலி

குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழில் உணர்வுபூர்வமாக மக்கள் அஞ்சலி செலுத்தி துக்கதினம் அனுஸ்டித்தனர்.கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற குண்டு வெடிப்பின் போது, தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் உயிரிழந்த பல நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தேசிய துக்கம் தினம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், யாழ்ப்பாணத்தில் உள்ள மரியன்னை தேவாலயத்தில் இன்று காலை 8.15 மணியளவில் வழிபாடுகளுடன், மெழுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தியதுடன், ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, ஆலயத்திற்குள் மெழுவர்த்தியை நாட்டி, அமைதியையும் , சமாதானத்தையும் வேண்டி பிரார்த்னைகளும் இடம்பெற்றன.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து ஆலயங்கள் கோவில் மணிகள் ஒலிக்கப்பட்டு, பூசை வழிபாடுகளும் இடம்பெற்றதுடன், அரச திணைக்களங்களிலும் அஞ்சலி செலுத்தி துக்கதினமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply