இலங்கையில் கடந்த 5 மாதத்தில் 17975 டெங்கு நோயாளர்கள், 26 மரணம்

கடந்த ஐந்து மாத காலப் பகுதியில் நாடு முழுவதிலும் 17975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இக்காலப் பகுதிக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 26 பேர் மரணித்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நோயாளர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை 3909 பேர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 25 நாட்களுக்குள் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.
மழை காலம் ஆரம்பமாகியுள்ளதனால், தனது வீடு, சூழல், பாடசாலை சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொது மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வருடத்தில் (2018) இலங்கை முழுவதிலும் 51000 டெங்கு நோயாளர்களே பதிவாகியுள்ளதாகவும், இவர்களில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply