மங்களவின் நிதி அமைச்சை தாருங்கள்:தயா கமகே ரணிலிடம் பகிரங்க வேண்டுகோள்

தனக்கு நிதி அமைச்சுப் பதவியை தந்தால் நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுத் தருவேன் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் செயற்பாடுகள் செயற் திறனற்ற விதத்திலேயே இடம்பெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் 5000 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (15) அலரிமாளிகையில் இடம்பெறுகின்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது இடம்பெற்ற கூட்டமொன்றில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருந்தார். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக கொண்டுவர வேண்டும் என மும்முரமாக ஈடுபட்டுவருபவர்களில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரரும் ஒருவராவார்.
அத்துடன், சஜித்தை ஆதரித்து மாத்தறையில் பெரும் பொதுக் கூட்டமொன்றை நடாத்தியவரும் நிதி அமைச்சர் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே நிதி அமைச்சரவை மாற்றுமாறு கருத்துக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply