எமது ஆதரவு இல்லாது ஜனாதிபதியாக முடியாது: மைத்திரி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியத்துவத்தையும் அதன் பெறுமதியையும் சகல தரப்பினருக்கும் காட்டப் போவதாக அக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இரத்தினபுரியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வழங்கியுள்ள சலுகைகள் பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு விளங்குகின்றது. கிராமத்திலுள்ள வாக்காளர்களுக்கும் சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவுக்கு செய்துள்ள உதவிகள் விளங்குகின்றது. அக்கட்சியிலுள்ள இரண்டாம் வரிசை உறுப்பினர்களுக்கு அது விளங்குவதில்லையெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இவர்கள் தாங்கள் மட்டுமே சரி என நினைக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தலை வெற்றிபெற 51 வீதம் வாக்குகள் பெறவேண்டும். வாக்குகள் எண்ணிக்கையில் கூறுவதாயின், 64 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் தேவை. அப்படியாயின், பொதுஜன பெரமுனவுக்கு நாம் இல்லாமல் வெற்றிபெற முடியுமா? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply