ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசவித்தவர்களுக்கு ஜனாதிபதி நிதி உதவி

பாரிய பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் ஒரே பிரசவத்தில் 3 பிள்ளைகளை பெற்றெடுத்த பெற்றோருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (24) ஜனாதிபதி செயலகத்தில் நிதி உதவி வழங்கினார்.

இதற்கமைய ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பிள்ளைகளின் தாயாரான வத்தலை, ஹெந்தல பிரதேசத்தை சேர்ந்த திருமதி. முதித்தா தனஞ்சனி எதிரிவீரவுக்கு 25 இலட்ச ரூபாய் நிதி உதவியும், ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பிள்ளைகளின் தந்தையான இம்பல்கஸ்தெனிய, யட்டத்தாவல பிரதேசத்தில் வசிக்கும் கே.எம். துஷித்த மங்கள ரூபசிங்கவுக்கு 20 இலட்ச ரூபாய் நிதி உதவியும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply