மன்மோகன் சிங் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

முன்னாள் பிரதமரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மன்மோகன் சிங் இன்று 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்வு அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என கூறி உள்ளார்.

டாக்டர் மன்மோகன் சிங், நாட்டின் பிரதமராக 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர், மத்திய நிதி மந்திரி, திட்டக்குழு துணைத்தலைவர், ரிசர்வ் வங்கி கவர்னர், தலைமை பொருளாதார ஆலோசகர் என பல்வேறு பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply