கோத்தாபயவின் பிராஜாவுரிமை தொடர்பான மனு விசாரணைக்கு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜாவுரிமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனு மீதான விசாரணை எதிர்வ்ரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.குறித்த மனுவை மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்கொள்வதை தடுக்குமாறு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவிற்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்திரகுப்தா தெனுவர மற்றும் காமினி விஜயங்கொட ஆகியோர் குறித்த மனுவை தாக்கல் சைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply