தாய்லாந்தில் சாலையில் பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் 13 பேர் பலி

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பாங்காக்கின் புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு தொழிற்சாலையில் ‘‘இன்டர்ன்‌ஷிப்’’ என அழைக்கப்படும் தொழிற்முறை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

மாணவர்களின் பயிற்சி நிறைவடைந்ததை தொடர்ந்து, தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கல்லூரி மாணவர்கள் 15 பேரும், தொழிற்சாலை அதிகாரிகள் 3 பேரும் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.

பஸ் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய பஸ் சாலையில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் தொழிற்சாலை அதிகாரிகள் உள்பட 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply