காலி முகத்திடலில் நேற்று பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் சஜித்

தனது உரைகளில் எந்த விதத்திலாவது ´ஸ்ரீ முகம்´ என தெரிவித்திருந்தால் அதற்காக மகாசங்கத்தினரிடமும், பொது மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று(10) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.
தன்னால் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக பொது மக்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு ஒருபோதும் பின்வாங்க போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ´ஸ்ரீ முகம்´ என அமைச்சர் சஜித் கூறிய வார்த்தை எதிர் தரப்பினரின் மேடைகளில் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply