சவுதி கடல் எல்லையில் ஈரானிய டேங்கர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

ஈரான் அரசுக்கு சொந்தமான ‘சபிட்டி’ என்ற பெட்ரோலிய டேங்கர் கப்பல் பெட்ரோலிய கச்சா எண்ணையுடன் இன்று செங்கடல் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது.

ஜெத்தா துறைமுகத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 5 மற்றும் 5.20 மணியளவில் கப்பலின் மீது இரு ஏவுகணைகள் அடுத்தடுத்து தாக்கின.

இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த டேங்கரில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. கடலில் கலந்த கச்சா எண்ணெய் தொடர்பான செய்திகள் வெளியானதும் சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை இன்று 2 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply