சீனாவில் 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சி பகுதியில் நேற்று இரவு 10.55 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம், யுலின் நகரத்தில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் பதிவாகியிருப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply