வடக்கு எம்.பி.க்கள் கொழும்புக்கு, ஓரிரு தினத்தில் ஆதரவு குறித்து தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடுத்து வரும் ஓரிரு தினங்களில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வடக்கு மக்களும் ஜனாதிபதித் தேர்தலில் எமது நிலைப்பாடு என்ன என்பது குறித்து வினவிவருவதாகவும் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு வரவுள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் சார்ல்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.
வடக்கின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கக் கூடிய ஒரு வேட்பாளருக்கு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கத த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply