மிக்-29 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது

கோவா மாநிலத்தில் கடற்படையின் மிக்-29கே ரக போர் விமானத்தில் 2 விமானிகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். விமான தளத்தில் இருந்து புறப்பட்ட, விமானம் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள், விமானத்தை தரையில் மோதாமல் தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானிகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply