ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாக்களித்தார்

2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (16) முற்பகல் பொலன்னறுவை புதிய நகரத்திலுள்ள ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஜயந்தி சிறிசேன அம்மையார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சகிதம் இன்று முற்பகல் வித்தியாலோக்க விகாரைக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் அங்கு தமது வாக்கினை பதிவு செய்த ஜனாதிபதி அவர்கள், வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை
தந்திருந்த பொதுமக்களுடன் சுமூக கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply