சஜித் பிரேமதாச கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வாழ்த்து : விசேட அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஸவுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் சற்று முன்னர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார். இலங்கை வரலாற்றில் அமைதியான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பொது மக்களுக்கும் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply