சீனாவில் லாரி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாப பலி

சீனாவின் தென்மேற்கில் உள்ள யுனான் மாகாணத்தில் வென்ஷான் நகரில் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் இருந்த பாதுகாப்பு சுவர் மீது திடீரென மோதிய அந்த லாரி கவிழ்ந்தது.
அப்போது, எதிர்த்திசையில் வந்த ஒரு சிறிய கார் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்று லாரியின் அடியில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று லாரி ஓட்டுனர் லூவோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply