ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் இன்று விவாதம்

புதிய சபை நடவடிக்கைகள் ஆரம்பமானாலும் புதிய தெரிவு குழுக்களுக்கான உறுப்பினர்கள் இதுவைரை தெரிவு செய்யப்படவில்லை என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.8 வது பாராளுமன்றத்தின் 4 வது சபை அமர்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த 03 ஆம் திகதி ஆரம்பமானது.
இவ்வாறு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானதுடன் முன்பு செயற்பட்ட அனைத்து தெரிவு குழுக்களும் கலைக்கப்பட்டன.
இதன் பிரகாரம் அரச கணக்காய்வு தெரிவுக் குழு, கோப் குழு, பொது மக்கள் முறைப்பாட்டு தெரிவுக் குழு மற்றும் அமைச்சின் ஆலோசனை தெரிவுக் குழு, அரசியல் அமைப்பு விவகாரங்களுக்கான தெரிவுக் குழு, விசேட சலுகைகளுக்கான தெரிவுக் குழு உள்ளிட்ட 12 தெரிவுக் குழுக்கள் கலைக்கப்பட்டன.
இவ்வாறு தெரிவுக் குழுக்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கு பதிலாக புதிய தெரிவுக் குழுக்களை தெரிவு செய்ய வேண்டியுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 20 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் புதிய தெரிவுக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பாராளுமன்றம் மீண்டும் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.
8 வது பாராளுமன்றத்தின் 4 வது சபை அமர்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரக உரை தொடர்பில் இன்றைய அமைர்வில் விவாதிக்கப்படவுள்ளது.
கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply