துப்பாக்கி சூட்டில் பெண் பலி: இருவர் காயம்

கராடுகல, பிட்டகும்புற பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ள சம்பவத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதோடு மற்றும் இருவர் காயமடைந்த நிலையில் பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்திற்குள் காணப்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபரைக் கைது செய்யும் வகையில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply