தான்சானியா – கிறிஸ்தவ தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு

தான்சானியா நாட்டின் மோஷி நகரில் உள்ள சர்ச்சில் நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பிரார்த்தனையின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெரிசலில் சிக்கி காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பிரார்த்தனையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் பலியானது தான்சானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply