லண்டனில் பயங்கரவாத தாக்குதல்! பொலிஸாரால் ஒருவர் சுட்டுக்கொலை

பிரித்தானியாவில் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்ட நபரை லண்டன் பொலிஸார் கொலை செய்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட நபர் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலுக்கு பலர் இலக்காகி காயமடைந்துள்ளனர். ஆயுதமேந்திய பொலிஸ் அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட நபரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற பகுதி வீதிகள் மூடப்பட்ட நிலையில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்களின் நிலை மற்றும் விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply