3 கோடி 50 இலட்சம் ரூபா செலவில் லபுகல தோட்டத்தில் பாலம்

லபுகல தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாலம் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பான நிகழ்வு தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் நேற்று இடமபெற்றது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகொளுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாலத்திற்கு 3 கோடி 50 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமார் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் இலங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply