கொரோனா வைரஸ் தாக்குதல் : சீனாவில் பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வு

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 723 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 80க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 803 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 2,147 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் 36,690 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது
கடந்த 2002-2003ம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply