பிரதமருடன் மேற்கொண்ட இந்திய விஜயம் மலையக மக்களின் வாழ்க்கைக்கு வெற்றியளிக்கும் : ஆறுமுகன் தொண்டமான்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன் இந்தியாவுக்கான ஐந்து நாள் விஜயம் மலையக மக்களின் வாழ்க்கைக்கு வெற்றியளிக்குமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோடு இந்தயாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு மலையக மக்கள் தொடர்பிலான பிரச்சினைகளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் ஆகியோரோடு இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இதனை தெரிவித்துள்ளதாக அமைச்சின் ஊடகபிரிவு தெரிவித்துள்ளது. 

அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, 

இந்திய வம்சாவளி மக்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாட பட்டதோடு மலையகத்திற்கான இந்திய அரசாங்கத்தின் ஊடாக வழங்கபடவிருக்கின்ற தனி வீட்டுத்திட்டம், மலையகத்திற்கான பல்கலைகழகம், மலையகத்திற்கான பாடசாலை கட்டிடங்கள் மற்றும் கலாசார நிறுவனங்கள் போன்றவை தொடர்பிலும் கலந்துரையாட பட்டதாகவும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சின் ஊடகபிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply