92 வது ஆஸ்கர் விருது – சிறந்த துணை நடிகர், பிராட் பிட்

ஆண்டுதோறும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞசல்ஸ் நகரில் இந்தாண்டுக்கான விழா துவங்கியது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி துவங்கியது. விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. ஜோக்கர், பாராசைட், 1917 உள்ளிட்ட 9படங்கள் இடம்பெற்றுள்ளன.
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. Once upon a time in Hollywood என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியத்ற்க விருது வழங்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply