தம்பியை காப்பாற்ற தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அக்கா

உத்தர பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள நாஜீல் பகுதியில் வசித்து வந்தவர் சேத்ரம் (வயது 40). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று இரவு சேத்ரம் தனது மனைவி ராஜகுமாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சேத்ரம் தனது துப்பாக்கியால் மனைவியை சுட்டுள்ளார். இதை தடுக்க முயன்ற தனது மகளையும் சுட்டுள்ளார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து தனது 14 வயதுடைய மகனையும் துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார்.

அப்போது அவரது மகள் சேத்ரமிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றி அவரை சுட்டார். இதில் சேத்ரம் உயிரிழந்தார். காயமடைந்த ராஜகுமாரி மற்றும் அவரது மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply