நாங்கள் ஆவலாக இருக்கிறோம் : மெலனியா ட்ரம்ப் ட்வீட்!

நியூயார்க் நகரில் நடைபெற்ற 74வது ஐ.நா பொதுக் குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்த மோடி இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்ற அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரதமர் மோடி சிறந்த மனிதர் என்றும், அவரை சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார். அவர்களது வருகைக்கு நன்றி தெரிவித்து மோடி ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியா வருமாறு அழைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியா செல்ல மிக ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இருநாட்டு உறவும் வலுப்பெறும் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி’ என கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply