வுஹான் நடவடிக்கைகள் இலங்கை இராஜதந்திர ரீதியில் பெற்றுக்கொண்ட மகத்தான வெற்றி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனாவின் வுஹான் நகரில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு தியத்தலாவ இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 33 மாணவர்களையும் அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று (14) இடம்பெற்றது.
இதற்கான நிகழ்வு அக்குரேகொட இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம்பெற்றது.
சுமார் இரண்டு வாரகாலம் தியத்தலாவ இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு விசேட சிகிச்சைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டு வந்தனர்.
இதற்கமைய நேற்றைய நிகழ்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி இந்த செயற்பாடு இலங்கை இராஜதந்திர ரீதியில் பெற்றுக்கொண்ட மகத்தான வெற்றி என கூறினார்.
அத்துடன் நாட்டு மக்களை கருத்தில் கொண்டு செயற்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த செயற்பாடு உலக நாடுகளுக்கு முன்னுதாரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரிய சிங்க உள்ளிட்ட பிரதநிதிகள் கலந்துக்கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply