4 பேருடன் பயணித்த முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி பயங்கர விபத்து!

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று(16) காலை மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி சந்திவெளியில் மட்டக்களப்பில் இருந்து கிரான் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரில் பதுளை நுனுகலையைச் சேர்ந்த ரங்கன் ராமசாமி (71 வயது) என்பவரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏனைய மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற சிறிய ரக லொறியினது சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply