கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் மின் தூக்கி இயங்கவில்லை, நோயாளர்கள் சிரமம்

Saturday, July 26th, 2025 at 8:05 (SLT)

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பயன்பாட்டில் இருந்து வந்த மின் தூக்கி கடந்த நான்கு நாட்களாக செயலிழந்த நிலையில் நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.சத்திர சிசிக்சை கூடம், அவசர சிகிச்சை, உள்ளிட்டவற்றுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்வது, சிகிச்சை நிறைவுற்றதும் விடுதிகளுக்கு மீளவும் அழைத்து வருவது போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்ட மின் தூக்கியே செயலிழந்துள்ளது

மேலும் வாசிக்க >>>

புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம் : பிரதமர்

Saturday, July 26th, 2025 at 7:58 (SLT)

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

குடும்ப பிரச்சனையில் கணவரின் நாக்கை கடித்து விழுங்கிய மனைவி

Friday, July 25th, 2025 at 10:55 (SLT)

குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரின் நாக்கை மனைவி கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான பீகார், கயா அடுத்த கிஜ்ரா சராய் நகரை சேர்ந்த கணவர் மற்றும் மனைவி ஆகிய இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் மனைவியை கணவர் தாக்கியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எதிர்கால உலகிற்கு ஏற்ப கல்வி மாற்றம் அமைச்சர் சரோஜா சுட்டிக்காட்டு

Friday, July 25th, 2025 at 10:43 (SLT)

பாடத்திட்டங்களையன்றி எதிர்கால உலகுக்கு பொருத்தமான வகையில் கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவதே கல்வி மறுசீரமைப்பின் நோக்கமாகும் என அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

X-PRESS PEARL தீ விபத்து உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Friday, July 25th, 2025 at 10:37 (SLT)

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தில் இலங்கையின் கடல்சார் சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதத்திற்கு, கப்பலின் உரிமை நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டது.

மேலும் வாசிக்க >>>

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

Friday, July 25th, 2025 at 10:33 (SLT)

மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவில் தாயும், இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்பு

Friday, July 25th, 2025 at 10:30 (SLT)

பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (24.07.2025) இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர் : அந்நாட்டு ஜனாதிபதி கடும் கண்டனம்

Friday, July 25th, 2025 at 10:27 (SLT)

கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளி ஒருவர் சந்தித்த துஷ்பிரயோக சம்பவத்தை அந்நாட்டு ஜனாதிபதி கண்டித்துள்ளார்.தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை கண்டித்து, “எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நான் 8 மாசம் வயிற்றில் இருக்கும்போதே, அப்பாவை கொண்டு போய்விட்டார்கள்

Friday, July 25th, 2025 at 10:23 (SLT)

அப்பாவை விடுதலை செய்யுமாறு இலங்கையின் எல்லா அரசாங்கங்களையும் கேட்டுக்கொண்டதாகவும் எனினும் எவரும் விடுதலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ள கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இந்த அரசாங்கமாவது தங்கள் அப்பாவை விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை கைது

Friday, July 25th, 2025 at 7:24 (SLT)

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தெஹிவளை துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை

Friday, July 25th, 2025 at 7:22 (SLT)

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

புதிய கல்விச் சீர்திருத்ததில் கல்வியை அடிப்படை உரிமையாக்க வேண்டும் : சஜித் கோரிக்கை

Friday, July 25th, 2025 at 7:19 (SLT)

காலாவதியான, பழைய முறைகளைப் பின்பற்றும், பாரம்பரிய கட்டமைப்பிற்குள் மட்டுண்ட கல்வி முறையே காணப்படுகிறது. இது நம் நாட்டு மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். அதனால் உத்தேச புதிய கல்விச் சீர்திருத்ததில் கல்வியானது ஓர் அடிப்படை உரிமையாக அமைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

Thursday, July 24th, 2025 at 23:59 (SLT)

WWE மல்யுத்த உலகில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), உண்மையான பெயர் டெர்ரி ஜீன் பொல்லியா (Terry Gene Bollea), 71 வயதில் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக அமெரிக்காவில் காலமானார்.

மேலும் வாசிக்க >>>

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் இராணுவ மோதல்

Thursday, July 24th, 2025 at 10:37 (SLT)

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இன்று 24 அதிகாலையில் ஆயுதமேந்திய மோதல்கள் வெடித்ததாக இரு நாடுகளின் இராணுவங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

பிள்ளையானின் அடிப்படை மனுவை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்

Thursday, July 24th, 2025 at 10:33 (SLT)

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (23) தீர்மானித்தது. தமது சட்டவிரோத கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து இவர்,இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>