காதலனை காப்பாற்ற ஓடிய காதலி, நீரில் மூழ்கி காணாமல் போனார்

Monday, July 21st, 2025 at 12:55 (SLT)

மஹியங்கனை பொலிஸ் பிரிவில் 17ஆவது கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் கால் வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்ற சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மீன்பிடிக்கச் சென்ற இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

Monday, July 21st, 2025 at 12:51 (SLT)

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இந்த இரண்டு நபர்களும் டியூப் ஒன்றின் உதவியுடன் மீன்பிடிப்பதற்காக பனஹடுவ ஏரிக்கு சென்றிருந்த வேளையிலேயே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அதிகாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து

Monday, July 21st, 2025 at 12:49 (SLT)

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

Sunday, July 20th, 2025 at 16:22 (SLT)

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (20) காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) காலை 10.00 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உலர்ந்த இஞ்சியுடன் ஒருவர் கைது

Sunday, July 20th, 2025 at 16:06 (SLT)

புத்தளம் – நுரைச்சோலை சஞ்சீதாவத்தை பகுதியில் இருந்து 2,828 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன், சந்தேகநபரொருவர் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 33 வயதுடையவர் எனவும், இவர் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

46 வருடங்களாக பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கியது : சிறிதரன் எம்.பி.விசனம் 

Sunday, July 20th, 2025 at 12:41 (SLT)

பயங்கரவாத தடைச்சட்டமானது கடந்த 46 ஆண்டுகளாக தமிழர்களை அடக்குமுறைக்குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் அதனை தாமதமின்றி முழுமையாக நீக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுவின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை : அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

Sunday, July 20th, 2025 at 12:38 (SLT)

குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும், தாயின் குடும்ப வழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்று மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல் : நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்

Sunday, July 20th, 2025 at 12:31 (SLT)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறையின் தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஹேகித்தையில் ஒருவர் வெட்டிக் கொலை

Sunday, July 20th, 2025 at 12:28 (SLT)

வத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் நேற்று (19) இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

இந்த அரசு இடது பக்கம் சிக்னல் போட்டு வலது பக்கமாக சென்று நாட்டை அழிக்கிறது : சஜித் பிரேமதாச 

Sunday, July 20th, 2025 at 12:24 (SLT)

தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் இடது பக்கம் சிக்னல் போட்டு, தற்போது வலது பக்கமாக சென்று கொண்டு, எத்தகைய கலந்துரையாடல்களையும் நடத்ததாது பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனங்களுக்கு கையளிக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

மேலும் வாசிக்க >>>

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சவுதி இளவரசர் காலமானார்

Sunday, July 20th, 2025 at 12:18 (SLT)

தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை (19) காலமானார்.

மேலும் வாசிக்க >>>

முதல்வர் ஸ்டாலினுக்கு கச்சதீவு காய்ச்சல் வந்துவிட்டது : மீனவ அமைப்பின் பிரதிநிதி குற்றச்சாட்டு

Saturday, July 19th, 2025 at 12:14 (SLT)

தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம் என தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம்,எமது மீனவ மக்கள் பதட்டம் அடைய மாட்டார்கள் என தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் – சிரியா இடையே போர் நிறுத்தம்

Saturday, July 19th, 2025 at 12:11 (SLT)

இஸ்ரேலும் சிரியாவும் பிராந்திய சக்திகளின் ஆதரவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக துருக்கிக்கான அமெரிக்க தூதுவர் டொம் பராக் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவது அதிகரிப்பு : அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

Saturday, July 19th, 2025 at 12:09 (SLT)

சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதமும், பாடசாலை மாணவிகளாக இருக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை

Saturday, July 19th, 2025 at 12:05 (SLT)

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவித்தலைப் புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>