குஜராத்தில் 242 பயணிகளுடன் விபத்திற்குள்ளான விமானம் : பிரிட்டன் பிரதமர் வெளியிட்ட தகவல்

Thursday, June 12th, 2025 at 20:22 (SLT)

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதே எனது எண்ணங்கள் உள்ளன என்று பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த விமான விபத்து தொடர்பில் தொடர்ந்து தகவல்கள் கிடைக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

விமான விபத்தில் இறந்தோருக்கு ரூ.1 கோடி காயமடைந்தோரின் சிகிச்சை செலவையும் ஏற்ற டாடா குழுமம்

Thursday, June 12th, 2025 at 20:14 (SLT)

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் விமானத்தில் பயணித்த 242 பேரும் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடாக வழங்கப்படும் என்று டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக டாடா குழுமம் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் கூறியுள்ளதாக அந்த எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

மேலும் வாசிக்க >>>

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்: ஏர் இந்தியா

Thursday, June 12th, 2025 at 20:10 (SLT)

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 242 பேரில், 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுக்கீசிய நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் செல்ல வேண்டிய ஏர் இந்தியா 171 விமானம் புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது.

மேலும் வாசிக்க >>>

அகமதாபாத்தில் 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்து : மீட்புப் பணிகள் தீவிரம்

Thursday, June 12th, 2025 at 20:05 (SLT)

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏஐ171 (AI)171 என்ற எண் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானது என்று எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் வாசிக்க >>>

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விவகாரம் உண்மையை மறைப்பதற்கு ஜனாதிபதி முயற்சி:முஜிபுர் ரஹ்மான்

Thursday, June 12th, 2025 at 10:32 (SLT)

இலங்கை சுங்கத்தில் இருந்து பரிசோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மை தன்மையை மறைப்பதற்கு ஜனாதிபதியும் முற்பட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

விக்னேஸ்வரன், சுமந்திரன் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

Thursday, June 12th, 2025 at 10:28 (SLT)

தமிழ் மக்கள் கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையே விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றிருந்தது.

மேலும் வாசிக்க >>>

வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவர் கொலை

Thursday, June 12th, 2025 at 10:24 (SLT)

மத்துகம, அம்பருல்லகஹவத்த பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது, பிறிதொரு குழவொன்று மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மகன் உயிரிழந்தார். நேற்று (11) இரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த் தகராறு மோதலாக மாறியதைத் தொடர்ந்து குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

கொவிட் மரணங்கள் தொடர்பில் சுகாதார பிரிவு வௌியிட்ட தகவல்

Thursday, June 12th, 2025 at 10:21 (SLT)

நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வடமேல் மருத்துவ பீடத்தின் தலைமை மருத்துவப் பேராசிரியர் துஷாந்த மெதகெதர இதனைத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

EPIGS’25 – குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Thursday, June 12th, 2025 at 10:18 (SLT)

EPIGS’25 – குளோபல் சௌத் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (ஜூன் 11) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி அநுர : அரச மரியாதையுடன் வரவேற்பு

Thursday, June 12th, 2025 at 7:47 (SLT)

ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மியரினால் (Frank-Walter Steinmeier) நேற்று புதன்கிழமை (11) சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8,130 மில்லியன் ரூபா பெறுமதியான 2,077 திட்டங்களுக்கு அனுமதி

Thursday, June 12th, 2025 at 7:44 (SLT)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8,130 மில்லியன் ரூபா பெறுமதியான 2,077 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்தி குழுவின் புதிய தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

செம்மணிப் மனிதப் புதைகுழி அகழ்வுகளை தொடர வேண்டும்:எம்.ஏ.சுமந்திரன்

Wednesday, June 11th, 2025 at 11:42 (SLT)

செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மனி பயணம்

Wednesday, June 11th, 2025 at 11:39 (SLT)

ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மனிய கூட்டாட்சி குடியரசுக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ரணில் இன்று முன்னிலை

Wednesday, June 11th, 2025 at 11:35 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்றையதினம்(11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சீனா விஜயம் செய்த டில்வினின் விசேட சந்திப்பு

Wednesday, June 11th, 2025 at 11:32 (SLT)

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட அந்தக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று சீனாவிற்கு விஜயம் செய்துள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இடம்பெற்றுள்ள இந்த விஜயத்தில் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>