யாழ்ப்பாணத்தில் வாக்கு பெட்டிகள் விநியோகம்

Monday, May 5th, 2025 at 10:03 (SLT)

நாடு முழுவதும் நாளை உள்ளூராட்சி சபை தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது

Monday, May 5th, 2025 at 9:58 (SLT)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (04) காலை 6 மணிமுதல் இன்று (05) காலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே மேற்படி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த காலப்பகுதியில் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

சுமந்திரனுக்கு எதிராக NPP முறைப்பாடு

Monday, May 5th, 2025 at 9:55 (SLT)

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினர் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். எம்.ஏ.சுமந்திரன், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலனை, அச்சுறுத்தும் வகையில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் உயிரிழப்பு

Monday, May 5th, 2025 at 9:48 (SLT)

நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் உல்பத்தகம, கல்கிரியாகம, அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான முதியன்சலாகே அஜித்குமார ஜெயசுந்தர என்ற பொலிஸ் கொஸ்தபிள் ஆவார்.

மேலும் வாசிக்க >>>

கல்கிஸ்சையில் துப்பாக்கிச் சூடு 19 வயதுடைய இளைஞன் பலி

Monday, May 5th, 2025 at 9:45 (SLT)

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கிஸ்சை கடற்கரை வீதி சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (05) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

வியட்நாம் சென்றடைந்தார் ஜனாதிபதி 

Sunday, May 4th, 2025 at 12:44 (SLT)

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் (Luong Cuong) இன் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை (03) நாட்டிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று ஞாயிற்றுக்கிழமை (04) முற்பகல் வியட்நாமின் நோய் பாய் (Noi Bai International Airport) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

மேலும் வாசிக்க >>>

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டமும்

Sunday, May 4th, 2025 at 12:40 (SLT)

கடந்த வருடத்தைய தேசிய தேர்தல் பிரசாரங்களில் வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு அதிருப்தி ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, பொருளாதார இடர்பாடுகளை தணிப்பதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது.

மேலும் வாசிக்க >>>

சிங்கப்பூர் பொதுத்தேர்தல் : மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது ஆளும் கட்சி : லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார் 

Sunday, May 4th, 2025 at 12:33 (SLT)

சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார். சிங்கப்பூர் பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஐஸ் போதைப்பொருட்களுடன் யுவதி கைது

Sunday, May 4th, 2025 at 12:29 (SLT)

அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் மிஹிதுபுர பகுதியில் இருபது கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்களுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஆற்றில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் பலி ஒருவர் மாயம்

Sunday, May 4th, 2025 at 12:27 (SLT)

வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலா ஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

டேன் பிரியசாத் கொலை : துப்பாக்கிதாரி கைது

Saturday, May 3rd, 2025 at 9:11 (SLT)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளரும், “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளருமான டேன் பிரியசத் கொலை வழக்கில் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் கொழும்பு கருவாத் தோட்டம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மரண வீட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

Saturday, May 3rd, 2025 at 9:09 (SLT)

மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு நேரத்தில் சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

1500 ரூபாய் இலஞ்சம் பெற்ற ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர் கைது

Saturday, May 3rd, 2025 at 9:07 (SLT)

ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த சுற்றுலா பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர், 1,500 ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பகுதியைச் சேர்ந்த நபரின் முறைப்பாட்டின் பேரில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழ் அரசுக் கட்சியுடன் சேர்ந்து பயணிக்க தயார்: கஜேந்திரகுமார் எம்.பி திட்டவட்டம்

Friday, May 2nd, 2025 at 11:12 (SLT)

தந்தை செல்வாவின் கொள்கையின்படி தமிழ் அரசுக் கட்சி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மே தின பேரணி

Friday, May 2nd, 2025 at 11:08 (SLT)

மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வளச்சுரண்டல்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் மே தின பேரணி இன்று (10.04) வியாழக்கிழமை மன்னாரில் இடம் பெற்றது.நாடு முழுவதிலும் இருந்து வருகை தந்த மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற மே தின பேரணியானது மாலை 2 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியிலிருந்து ஆரம்பமாகி மன்னார் வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஜார் பகுதியைச் சென்றடைந்தது.

மேலும் வாசிக்க >>>