ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்புமனுகள் நிராகரிப்பு நீதிமன்றத்தை நாட முடிவு : சுரேஷ் பிரேமச்சந்திரன்

Friday, March 21st, 2025 at 9:05 (SLT)

தமது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடருவோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். யாழ் . மாவட்டத்தில் சில சபைகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும்: ரணில்

Friday, March 21st, 2025 at 8:57 (SLT)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து இலங்கை வெளியேறவேண்டும் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய கிளை குறித்து விசாரணைகளை கோரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Friday, March 21st, 2025 at 8:53 (SLT)

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரன்ன பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹூங்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (20) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் 22 கட்சிகள், 13 சுயேச்சைகள் ‘அவுட்’ : அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்

Friday, March 21st, 2025 at 8:50 (SLT)

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 136 கட்சிகள் மற்றும் 23 சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

பட்டலந்த குறித்துஎந்த கருத்தினையும் வெளியிடமாட்டேன் : ரணில்

Friday, March 21st, 2025 at 7:16 (SLT)

எனக்கு பட்டலந்த குறித்து பேசுவதில் தற்போது ஆர்வம் இல்லை சர்வதேச விவகாரங்கள் பட்டலந்தையை விட சுவாரஸ்யமாக உள்ளன என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இத்தாலி கடற்பரப்பில் படகு விபத்து : 6 பேர் பலி

Friday, March 21st, 2025 at 7:11 (SLT)

இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். டியூனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் துறைமுகத்திலிருந்து 56 அகதிகள் இறப்பர் படகில் மார்ச்17 அன்று பயணம் மேற்கொண்டிருந்தனர். பயணம் தொடங்கிய சில மணி நேரங்களில் அந்த படகில் ஓட்டை விழுந்து காற்று வெளியேறத் தொடங்கியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

Thursday, March 20th, 2025 at 8:28 (SLT)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (20) நிறைவடைகின்றன. இன்று நண்பகல் 12:00 மணிக்குப் பிறகு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலை

Thursday, March 20th, 2025 at 8:24 (SLT)

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (20) மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். தேசபந்து தென்னகோனின் பிணை மனு மீதான தீர்ப்பை மாத்தறை நீதவான் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

சரியான விஞ்ஞானபூர்வ தரவுகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை கையாளுமாறு எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை

Thursday, March 20th, 2025 at 8:16 (SLT)

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் பிரகாரம், ஒரு நபர் ஒரு மாதம் வாழ்வதற்கு 16334 ரூபா தேவை என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நால்வர் கொண்ட குடும்பத்திற்கு மாதம் 65336 ரூபா தேவைப்படுகிறது. இதன் மூலம் வாழ முடியுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

மேலும் வாசிக்க >>>

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’ : மரிக்கார் எம்.பி.

Thursday, March 20th, 2025 at 8:13 (SLT)

பட்டலந்த தொடர்பில் தேடும் போது நாடு பூராகவும் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாகவும் அரசாங்கம் தேட வேண்டும். அதனால் சித்திரவதை முகாமுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு அரசாங்கம் தண்டனை வழங்கும் என்பது சந்தேகமாகும். அந்தளவுக்கு அவர்களுக்குள் டீல் இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர் கைது

Thursday, March 20th, 2025 at 8:08 (SLT)

நாட்டில் இடம்பெற்ற நான்கு மனித படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸாரால் தேடப்பட்டு வந்த திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் குழுக்களின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கட்சியின் உள்ளக பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கின்றோம்: இம்தியாஸின் கடிதம் ஏற்றுக் கொள்ளடிப்படவில்லை : திஸ்ஸ அத்தநாயக்க

Thursday, March 20th, 2025 at 8:05 (SLT)

கட்சியிலிருந்து உறுப்பினர்களை நீக்கிவிட்டு முன்னோக்கிப் பயணிக்க முடியாது. இம்தியாஸ் பாகீர் மாக்கர் விவகாரம் மாத்திரமின்றி கட்சியின் உள்ளக மட்டத்தில் இன்னும் பல விவகாரங்கள் உள்ளன. இதன் பின்னணியிலுள்ள காரணிகள் உட்பட உள்ளக பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அர்ச்சுனா எம்.பி குறித்த சபாநாயகரின் தீர்மானத்தை வரவேற்கிறோம் : நிசாம் காரியப்பர்

Thursday, March 20th, 2025 at 7:28 (SLT)

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அச்சுனா தொடர்பில் சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை வரவேற்கிறோம். இனியாவது அவர் தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக்கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பினை தூண்டி விடக்கூடாதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு

Thursday, March 20th, 2025 at 7:22 (SLT)

பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர். இது வெறும் மரியாதை நிமித்தமான வருகை மட்டுமல்ல இந்த சந்திப்பின் போது, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தொழில்நுட்பம், புத்தகம், நிலைத்தன்மை மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கான சிறந்த வாழ்க்கையை உருவாக்குவது குறித்து முக்கியமான விவாதங்களை நடத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்

Thursday, March 20th, 2025 at 7:17 (SLT)

விண்வெளி வீரர்கள் நாடு திரும்பியது குறித்து மேற்கு வங்க சட்டமன்றத்தில் கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி பேசியிருக்கிறார்.ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி சென்றிருந்தார்கள். திடீரென அவர்கள் சென்ற விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கே தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் வாசிக்க >>>