இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சி

Wednesday, March 19th, 2025 at 11:08 (SLT)

2024ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

காதலியை கொலை செய்துவிட்டு பொலிஸில் சரணடைந்த காதலன்

Wednesday, March 19th, 2025 at 11:04 (SLT)

புத்தளத்தல் தனது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சிறை அதிகாரிகள் தாக்கியதில் கைதி ஒருவர் உயிரிழப்பு

Wednesday, March 19th, 2025 at 11:00 (SLT)

மெகசின் சிறையில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது நடந்த தாக்குதலில் காயமடைந்த ஒரு கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக சிறை அதிகாரிகள் இருவர் மற்றும் மேலும் இரண்டு கைதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

வீட்டிலிருந்த அங்கவீனரை கொ லை செய்து பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்ற நபர்

Wednesday, March 19th, 2025 at 10:57 (SLT)

இரத்தினபுரி – பெல்மடுல்ல, மீகஹகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து சடலத்தை வாயிற்கதவுக்கு அருகில் கட்டி வைத்துவிட்டு பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் சரண்

Wednesday, March 19th, 2025 at 10:55 (SLT)

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று புதன்கிழமை (19) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் (சி.சி.டி) எட்டு முன்னாள் அதிகாரிகளைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்தது.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு

Wednesday, March 19th, 2025 at 10:53 (SLT)

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாளை வியாழக்கிழமை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை ஊடகத் தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

17 மணி நேர பயணம் : 9 மாதங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர் சுனிதா உள்ளிட்ட குழுவினர்

Wednesday, March 19th, 2025 at 8:25 (SLT)

17 மணி நேர பயணத்தை முடித்துக் கொண்டு 9 மாதங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் சுனிதா உள்ளிட்ட குழுவினர். விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

டிரம்ப் – புட்டின் பேச்சுவார்த்தை – முழுமையான யுத்த நிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்தார் ரஸ்ய ஜனாதிபதி

Wednesday, March 19th, 2025 at 8:19 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தைகளின் போது உடனடி யுத்தநிறுத்தத்திற்கான வேண்டுகோளை நிராகரித்துள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைனின் வலுசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு இணங்கியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேசபந்து தென்னகோனை கைது செய்ய மேலும் நான்கு விசாரணைக் குழுக்கள் நியமனம்

Tuesday, March 18th, 2025 at 10:18 (SLT)

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனவரி மாதத்தில் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்ற அரசாங்கம்

Tuesday, March 18th, 2025 at 10:14 (SLT)

அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் ஒரு ட்ரில்லியன் ரூபாவை கடனாக பெற்றுள்ளது. திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மூலம் அரசாங்கம் இந்த கடனை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார் யாழில் விபத்து

Tuesday, March 18th, 2025 at 10:12 (SLT)

யாழ்ப்பாணம் – நாவற்குழி மாதா கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை (17) விபத்து இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியோரத்தில் உள்ள மாதா கோவிலின் மதிலுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Tuesday, March 18th, 2025 at 10:09 (SLT)

மேல், சபரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 10 மில்லி மீற்றருக்கு மழை பெய்யக்கூடும்.

மேலும் வாசிக்க >>>

சுற்றுலா அமைச்சு அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

Tuesday, March 18th, 2025 at 10:07 (SLT)

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். எனவே, இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

பெண்களை அச்சுறுத்தும் “மாதவிடாய் வறுமை”

Tuesday, March 18th, 2025 at 8:33 (SLT)

21 வயதுடைய சோபிகா, யாழ் பல்கலைக்கழகத்தின் 3 ஆம் வருட மாணவி, மாதவிடாய்த் துவாய்களின் விலையேற்றத்தால் , பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். ” நாங்கள் மாதவிடாய் நாட்களிலும் தொடர்ந்து 5 மணித்தியாலங்கள் வகுப்பில் இருக்க நேரிடும், இதனால் தரமான மாதவிடாய்த் துவாய்களைப் பாவிக்க வேண்டும். அதன் விலை 600 ரூபா. வெறும் 8 துவாய்கள் மட்டுமே ஒரு பெட்டியில் இருக்கிறது. மாதாந்தம் இதனைக் கொள்வனவு செய்வதற்கு 1400 ரூபா தேவைப்படுகிறது. இன்றைய காலப்பகுதியில் இது பெரிய தொகை “என்றார். இவ்வாறு மாதவிடாய் கால சவால்களால்ப் பாதிக்கப்படும் பெண்கள் நாட்டில் அதிகரித்துள்ளனர். மாதவிடாய்; துவாய்களின் விலையேற்றம்,போதிய தெளிவின்மை, பாரம்பரிய நம்பிக்கைகள் போன்றவை மாதவிடாய் வறுமைக்கான காரணமாக உள்ளன.

மேலும் வாசிக்க >>>

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில் புத்தபெருமானின் திருவுருவச்சிலைகளை நில ஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுகின்றன : துரைராசா ரவிகரன்

Tuesday, March 18th, 2025 at 8:29 (SLT)

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில் புத்தபெருமானின் திருவுருவச்சிலைகளை நில ஆக்கிரமிப்பின் எல்லைக்கற்களாக பயன்படுத்தப்படுகின்றன. நீதிமன்ற கட்டளைகளை மீறி, அத்துமீறி கட்டியெழுப்பப்படும் விகாரைகள் ஒரு பௌத்த சின்னமல்ல ஊழலின் சின்னம். பௌத்த விகாரை ஒன்றையும், அசோகச்சக்கரத்தையும் தனது சின்னமாக கொண்ட இலங்கை தொல்பொருள் திணைக்களம், எவ்வாறு இலங்கையில் உள்ள எல்லா மதத்தவர்களின் தொல்லியலையும் நடுநிலைமையுடன் கையாளக்கூடிய திணைக்களமாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>