இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் முன்மொழிவுடனான புதிய தீர்மானம் அவசியம் : இணையனுசரணை நாடுகளிடம் கஜேந்திரகுமார் கடிதம் மூலம் வலியுறுத்தல்

Thursday, March 6th, 2025 at 6:11 (SLT)

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரித்திருப்பதுடன் உள்ளகப்பொறிமுறை மாத்திரமே கருத்திற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான முன்மொழிவை உள்ளடக்கிய புதிய பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் சடலம் மீட்பு

Thursday, March 6th, 2025 at 6:07 (SLT)

பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் குறிப்பிட்டனர். புதன்கிழமை (5) மாலை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டனர்.

மேலும் வாசிக்க >>>

தமிழர் ஆணையைப் பெற்றதாகக் கூறும் அரசு அவர்களின் அபிலாஷைகளைப் புறக்கணிக்கிறது : எம்.ஏ.சுமந்திரன்

Thursday, March 6th, 2025 at 6:04 (SLT)

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருப்பதானது, கடந்தகால மீறல்கள் பற்றிய உண்மைகளை அறியவேண்டிய அவசியம் தமக்கு இல்லை அல்லது அவை மூடிமறைக்கப்படவேண்டும் என்ற தோரணையிலேயே அவர்கள் செயற்படுவதையே காண்பிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

Thursday, March 6th, 2025 at 6:00 (SLT)

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா புதன்கிழமை (5) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் உறுதி: வசந்த சமரசிங்க

Wednesday, March 5th, 2025 at 13:20 (SLT)

சம்பள நிர்ணய சபையுடனான கடந்தகால பேச்சுவார்த்தைகளைப் போலன்றி, தற்போது அது தொடர்பாக முறையான இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும் எனவும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க சபையில் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

யாழிலிருந்து முல்லைத்தீவுக்கு வரும் தீயணைப்புப் படை : செல்வம் எம்பியின் கோரிக்கை

Wednesday, March 5th, 2025 at 13:17 (SLT)

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் தீயணைப்பு படை இல்லாத காரணத்தினால் திடீரென்று ஏற்படும் தீ விபத்துகளினால் பெரும் சிக்கல்களை எதிர் நோக்க வேண்டிய இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பாகிஸ்தான் இராணுவ தளம் மீது தற்கொலை தாக்குதல்

Wednesday, March 5th, 2025 at 13:14 (SLT)

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தானிய அதிகாரிகளும், மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

வாக்களித்தவர்களாலேயே துரத்தி அடிக்கபடுவீர்கள் : நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

Wednesday, March 5th, 2025 at 13:10 (SLT)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் உங்களுக்கு வாக்களித்த மக்களே உங்களை விரட்டி அடிப்பார்கள்” என அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தன் உயிரை மாய்க்க முயன்ற பிரபல பாடகி கல்பனா

Wednesday, March 5th, 2025 at 13:07 (SLT)

பிரபல பின்னணிப் பாடகியான கல்பனா தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.44 வயதான கல்பனா, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ள நிலையில், அதிகளவான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு, சுயநினைவற்ற நிலையில் இருந்துள்ளார் எனவும், இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

5.2 கிலோ குஷ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை கைது

Wednesday, March 5th, 2025 at 13:03 (SLT)

குஷ் போதைப்பொருள் தொகையுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

7வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துங்கள் : பைசர் முஸ்தபா

Wednesday, March 5th, 2025 at 5:28 (SLT)

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது போன்று 7வருடங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தலையும் விரைவாக நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமையால் மாகாண அதிகாரங்கள் அதிகாரிவாதத்துக்கு ஆளாகி இருக்கின்றன என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று மழை பெய்யும் சாத்தியம்

Wednesday, March 5th, 2025 at 5:21 (SLT)

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (05) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல்

Wednesday, March 5th, 2025 at 5:19 (SLT)

வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வவுனியாவில் உணவகம் மீது தாக்குதல்: ஒருவர் கைது

Tuesday, March 4th, 2025 at 9:29 (SLT)

வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை (03) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேலும் வாசிக்க >>>

உக்ரைனிற்கான இராணுவஉதவிகளை இடைநிறுத்துகின்றது அமெரிக்கா

Tuesday, March 4th, 2025 at 9:26 (SLT)

உக்ரைனிற்கான இராணுவஉதவிகளை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>