முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகி 8 வருடம் : வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம்

Saturday, March 8th, 2025 at 11:46 (SLT)

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், அதனை முன்னிட்டு சனிக்கிழமை (8) வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தம்பி கொலை : அண்ணன் தப்பியோட்டம்

Saturday, March 8th, 2025 at 11:39 (SLT)

இரத்தினபுரி மாவட்டம் எலபாத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலுபத்கல பிரதேசத்தில் அண்ணனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தம்பி கொலை செய்யப்பட்டுள்ளதாக எலபாத்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்பு

Saturday, March 8th, 2025 at 11:24 (SLT)

கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகாவலி கங்கைக்கு அருகில் வெள்ளிக்கிழமை (07) மாலை சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பாடசாலைகளில் பணம் அறவிட்டால் அறிவிக்கவும்:அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

Saturday, March 8th, 2025 at 11:21 (SLT)

கல்விக் கொள்கைகளை முறையாக செயல்படுத்தாததாலும், அரசியல் தலையீடுகளாலும் பல நெருக்கடிகள் எழுந்துள்ளதாகவும், பாடசாலைகளில் பணம் வசூலிப்பது குறித்து கல்வி அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால், அது குறித்து உடனடியாக விசாரிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய முடியாத பரிதாப நிலை:வைத்தியர் சமல் சஞ்சீவ

Saturday, March 8th, 2025 at 11:18 (SLT)

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மற்றும் கடந்த அரசாங்கத்தில் இருந்த பாராளுமன்ற அமைச்சர்களுக்கு எதிரான பண மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முன்னாள் பதில் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய முடியாத பரிதாப நிலையில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியின் மகளிர் தின செய்தி

Saturday, March 8th, 2025 at 11:10 (SLT)

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் : வேலுசாமி இராதாகிருஸ்ணன்

Friday, March 7th, 2025 at 5:33 (SLT)

தோட்ட பாடசாலைகளை பொறுப்பேற்றதை போன்று தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். பெருந்தோட்ட பகுதிகளில் நிலவும் சுகாதார மற்றும் குடிநீர் பிரச்சினை தொடர்பில் சுகாதார அமைச்சு விசேட கவனம் செலுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

தனியார் காணியில் தையிட்டி விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? : சபையில் எஸ். சிறிதரன் கேள்வி

Friday, March 7th, 2025 at 5:29 (SLT)

யாழ்-தையிட்டி பகுதியில் தனியார் காணியானது விகாரை அமைப்பதற்கென சுவீகரிக்கப்படவில்லையாயின் அக்காணிக்குள் விகாரையினை கட்டியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல் என்பதை அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா? தங்களது காணியினை தங்களிடம் கையளிக்குமாறு போராடி வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசின் தீர்வு என்ன என்பதை அமைச்சர் அறியத்தருவாரா? என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சரிடம் பல கேள்விகளை முன்வைத்தார்.

மேலும் வாசிக்க >>>

மன்னார் பொது வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக செல்வம் எம்.பி.சுட்டிக்காட்டு 

Friday, March 7th, 2025 at 5:26 (SLT)

சுகாதார அமைச்சர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சென்று அங்கு   காணப்படும் குறைப்பாடுகளை ஆராய வேண்டும்.  வைத்தியசாலையில்   காணப்படும்   வசதி குறைபாட்டால் மன்னார்  மாவட்ட மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள்.  ஆகவே   நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு  பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் வலியுறுத்துகிறேன் என்று  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் விமானப் பயண கடவுச்சீட்டுக்கு வரவேற்பு

Friday, March 7th, 2025 at 5:22 (SLT)

உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் பயண கடவுச்சீட்டைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்க கூடிய இடங்களைக் கருத்தில் கொண்டு “தி ஹென்லி” தரவரிசைப் பட்டியலில் இலங்கை 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் சூறாவளி

Thursday, March 6th, 2025 at 8:23 (SLT)

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூ சவுத் வேல்ஸ் ஆகிய பகுதிகளுக்கு கடுமையான பாதிக்கப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

சூடானில் ஓராண்டில் 200 குழந்தைகள் பாலியல் பலாத்காரம்

Thursday, March 6th, 2025 at 8:18 (SLT)

சூடான் நாட்டில், 2024ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை, 200 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், கடந்த 2023 ஏப்ரலில், இராணுவத்திற்கும், துணை இராணுவப்படையான ஆர்.எஸ்.எப்.,க்கும் இடையே மோதல் வெடித்தது. கடந்த ஆண்டு துவக்கத்தில் மோதல் அதிகரித்தது. இதில், 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 14 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு விரட்டப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஜப்பானில் 50 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீ

Thursday, March 6th, 2025 at 8:15 (SLT)

ஜப்பானில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரு வாரமாக எரியும் காட்டுத்தீயை அணைக்க 2000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். உலக நாடுகளில் காட்டுத்தீ மோசமான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயை உதாரணமாக கூறலாம்.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாசாரம் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் : ஸ்ரீநேசன்

Thursday, March 6th, 2025 at 6:23 (SLT)

மடக்களப்பில் வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் இறந்துள்ளார். ஆரையம்பதியிலும் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சமூகத்தை குழப்பும் விதத்தில் பல்வேறு செயற்பாடுகள் நடக்கின்றன. ஆவா குழுவென்று ஒரு குழுவை யாழ்ப்பாணத்தில் உருவாக்கியிருந்தனர். கிரீஸ் மனிதர்களையும் உருவாக்கியிருந்தனர். இதனை உருவாக்கியவர்கள் யாரென மக்களுக்கு தெரியும். இப்போது மட்டக்களப்பிலும் வாள்வெட்டு கலாசாரத்தை உருவாக்குகின்றனர். ஜனாதிபதியும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவற்றை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

தேசிய பிரச்சினைகளை நாம் சபையில் பேசும் போது சபாநாயகர் இடமளிக்காது எமக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்: சபாநாயகரின் செயற்பாடு மிக மோசமானது :சாணக்கியன்

Thursday, March 6th, 2025 at 6:15 (SLT)

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு பிள்ளையானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிள்ளையானுக்கு பதிலாக அவரது சகாவான இனியபாரதி கலந்துக்கொண்டுள்ளார். இங்கு என்ன பேசப்பட்டது. தேசிய பிரச்சினைகள் பற்றி நாங்கள் சபையில் பேசும் போது அதற்கு இடமளிக்காமல் சபாநாயகர் எமக்கு களங்கம் ஏற்படுத்துகிறார். சபாநாயகரின் செயற்பாடு மிக மோசமானது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடுமையாக சாடினார்.

மேலும் வாசிக்க >>>