ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப்பொறிமுறையை இறையாண்மையுடைய நாம் ஏற்கோம் : ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக அறிவிப்பு

Tuesday, March 4th, 2025 at 9:22 (SLT)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் உறுப்புநாடுகள் மீது பின்பற்றப்படும் மாறுபட்ட அணுகுமுறைகள் அப்பேரவை மீதான நம்பிக்கை இழக்கப்படுவதற்கு வழிகோலியிருப்பதாக விசனம் வெளியிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக, இறையாண்மையுடைய நாடொன்றால் ஆதாரங்களைத் திரட்டும் வெளியகப்பொறிமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், ஆகவே தாம் அப்பொறிமுறையை நிராகரிப்பதாகவும் அறிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கனடாவின் இந்தப் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்

Tuesday, March 4th, 2025 at 6:05 (SLT)

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திங்கட்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் அதிகாலை 5:02 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

2023 – 2024 ஆண்டுகளில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

Tuesday, March 4th, 2025 at 5:57 (SLT)

இலங்கையில் 2023ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Tuesday, March 4th, 2025 at 5:54 (SLT)

இவ்வாண்டின் பெப்ரவரி மாதத்தில் 232,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, இவ்வாண்டின் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் 232,341 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமது இயலாமையை மறைத்துக் கொள்ள பிறர்மீது பழி சுமத்துவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும் : காஞ்சன விஜேசேகர

Monday, March 3rd, 2025 at 10:45 (SLT)

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தீர்வை வரி சூத்திரத்தை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உயர்நீதிமன்றம் 2024 ஆகஸ்ட் மாதம் இரத்துச் செய்தது. நீதிமன்றத்தின் தீர்மானத்தை செயற்படுத்த சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கோரினோம். நீதிமன்றத்தின் தீர்மானத்தை செயற்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தோம் என முன்னாள் மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி

Monday, March 3rd, 2025 at 10:40 (SLT)

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய, எதிர்வரும் ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சியொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், 19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழ் மக்கள் கூட்டணி தனித்து மான் சின்னத்தில் போட்டி : மணிவண்ணன்

Monday, March 3rd, 2025 at 10:38 (SLT)

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

6 வாரத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இறுதி அறிக்கை

Monday, March 3rd, 2025 at 10:33 (SLT)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

மேலும் வாசிக்க >>>

ரயிலில் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

Monday, March 3rd, 2025 at 10:30 (SLT)

அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் இடையில் 52.5 தூணுக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இவ்வாரத்திற்குள் வெளியிடப்படும்

Monday, March 3rd, 2025 at 10:26 (SLT)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை,  தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாரத்திற்குள் வெளியிடும் என எதிர்ப்பாரப்பதாக பஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கும் நாமல்

Monday, March 3rd, 2025 at 10:24 (SLT)

நாடாளுமன்ற சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்து நாடாளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அதைத் தடுக்க தனிநபர் பிரேரணையைக் கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Monday, March 3rd, 2025 at 10:21 (SLT)

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனினும் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது.
எரிபொருள் நிலையத்தில் உரிமையாளர்களே திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

எழுவைதீவு அனலைதீவு இடையே 197 கிலோ கஞ்சா மீட்பு

Monday, March 3rd, 2025 at 10:18 (SLT)

எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோகிராம் மற்றும் 400 கிராம் கஞ்சா வினை இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் பொழுது கிடைக்கபெற்ற தகவலுக்கமைவாக எழுவை தீவு அனலை தீவு கடற்பரப்பில் பயணித்த படகொன்றினை
சோதனையிட்ட பொழுது 190 கிலோகிராம் 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.

மேலும் வாசிக்க >>>

இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும்

Monday, March 3rd, 2025 at 10:15 (SLT)

கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (03) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிரித்தானிய பிரதமரையும் சந்தித்த ஜெலென்ஸ்கி! சூடுபிடிக்கும் போர்க்களம்

Sunday, March 2nd, 2025 at 11:06 (SLT)

உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்றைய தினம் (01.03.2025) லண்டனில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>